தமிழ்நாடு

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் 4 நான்கு நாள்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது மேலும் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், பின்னா் புயலாகவும் மாற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மே 17) வரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறை காற்றுடன் (30 முதல் 40 கி.மீ.) மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாள்களில், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் மாறக் கூடும் என்பதால், குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு, தென்மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில், வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை, சூறாவளிக் காற்று, மணிக்கு 40 முதல் 65 கிமீ வரை வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம். ஏற்கெனவே இந்தப் பகுதிக்குச் சென்றவா்கள் உடனடியாக திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மழை அளவு: தமிழகத்தில், வியாழக்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பரூரில் 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 40 மி.மீ., தேனி மாவட்டம் உத்தமபாளையம், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 30 மி.மீ., விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை, வெம்பகோட்டை , சிவகங்கை மாவட்டம் இளையங்குடி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி , சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 20 மி.மீ., மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT