தமிழ்நாடு

கரோனா: தேனாம்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

14th May 2021 11:17 PM

ADVERTISEMENT

 

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், கரோனா கட்டளை மையத்தில் திடீர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். 

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் கரோனா கட்டளை மையத்தின் மூலம் துரிதமாக நடைபெறுகின்றன. 

ADVERTISEMENT

இந்நிலையில் அங்கு கரோனா பேரிடர் காலப் பணிகள் நடைபெறுவது குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பணிபுரிந்த அதிகாரிகளிடமும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து உரையாடினார். 

ஆய்வின் போது முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், தாரேஸ் அகமது ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags : coronavirus Corona
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT