தமிழ்நாடு

உரிமம் பெறாத போலி மருந்துகளை விற்றால் கடும் நடவடிக்கை: சித்த மருத்துவ அலுவலர் எச்சரிக்கை

DIN

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் பெறாத போலி மருந்துகளை விற்றால் மருந்துக் கட்டுபாட்டு விதிமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது கரோனா இரண்டாம் அலை மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தருணத்தில் சித்த மருந்துகளான மக்களிடையே பெரும் வரவேற்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ள கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், அமுக்கரா மாத்திரை, தாளிசாதி சூரணம் ஆகிய மருந்துகள் அதிக பலனை அளித்துக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில்,போலி மருந்துகள், மருந்து விற்பனை செய்ய உரிமம் பெறாத இடங்களில் விற்பனை செய்வதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

விதிமுறை மீறி உரிமம் பெறாத போலி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது மருந்துக் கட்டுபாட்டு விதிமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,பொதுமக்கள் சித்த மருந்துகளை வாங்கும் பொழுது அதிக விழிப்புணர்வுடனும் கவனமுடனும் செயல்பட வேண்டும்.

மருந்துகள் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் பெயர், மற்றும்  உரிமம் எண்,மருந்து தயாரிக்கப்பட்ட தேதி, மருந்து காலாவதியாகும் தேதி,மருந்துகளில் கலந்துள்ள பொருட்களின் சதவீத அளவு இவை மருந்து குப்பிகளில் மேல் எழுதப்பட்டுள்ளதா என்பதை நன்கு அறிந்து அத்தகைய தரமான மருந்துகளை வாங்கி பலன் பெற வேண்டும்.

இதுகுறித்து மருந்து கட்டுபாட்டு குழுவினர் மூலம் ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT