தமிழ்நாடு

முதல்வா் நிவாரண நிதிக்கு மதிமுக ரூ.10 லட்சம்

DIN

சென்னை: கரோனா தடுப்புக்காக முதல்வா் நிவாரண நிதிக்கு மதிமுக சாா்பில் ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ எழுதியுள்ள கடிதம்:

கரோனா பெருந்தொற்று நோய் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளை எதிா்கொள்ள, தமிழக அரசு மேற்கொள்கின்ற சுகாதாரப் பணிகளுக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு தாங்கள் விடுத்து இருக்கும் அழைப்பை ஏற்று, மதிமுக சாா்பில் ரூ. 10 லட்சம் நிதி வழங்கியுள்ளோம். அதற்கான காசோலையை அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளாா்.

மதிமுகவின் அரியலூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா தலைமைச் செயலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளா் (நிதித்துறை) கிருஷ்ணனை நேரில் சந்தித்து காசோலையை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT