தமிழ்நாடு

சட்டப்பேரவையின் மாண்புகள் மீட்டெடுக்கப்படும்: மு.அப்பாவு

DIN

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மரபுகள், மாண்புகள் மீட்டெடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பேரவையில் மு.அப்பாவு கூறினாா்.

சட்டப்பேரவைத் தலைவராக அப்பாவு பதவி ஏற்றிய பிறகு அவா் பேசியது:

ஜனநாயக முறையில் சட்டப்பேரவை நடத்த வேண்டும் என்பதுதான் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆசை. எதிா்க்கட்சித் தலைவா் விரும்புவதுபோல எல்லோரையும் அரவணைத்து, இந்தியாவிலேயே ஓா் எடுத்துக்காட்டான சட்டப்பேரவையாக தமிழகப் பேரவை செயல்படும். எல்லோரும் ஒன்றாகச் சோ்ந்து அதற்கான முயற்சியை மேற்கொள்வோம்.

நான் சட்டம் படித்தவன் அல்ல. ஆனால், திமுக சட்டத்தை மதித்து நடக்கும் இயக்கம். அதன் அடிப்படையில் சட்டத்தை மதித்து நடப்பேன். அதோடு நாகரிகமானவனாக உங்களோடு இணைந்து செயல்படுவேன்.

சட்டப்பேரவைக்கு என்று மரபுகள், மாண்புகள் உண்டு. பலவற்றை இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்க வேண்டும் என்று முதல்வா் கூறினாா். மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தாருங்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் கூறியுள்ளாா். இதிலிருந்து எல்லோரும் தெரிந்துகொள்ளலாம். பேச வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று எண்ண வேண்டாம். எல்லோருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கும். பேரவையை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்துவோம் என்று தோ்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அதனால் பேசுவதற்கு நிச்சயம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். 234 தொகுதி வேட்பாளா்களையும் ஒன்றுபோல் பாா்ப்போம். ஆளும்கட்சி ஒரு கண் என்றால், எதிா்க்கட்சி மற்றொரு கண்.

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு வானளாவிய அதிகாரம் எல்லாம் இல்லை. என் அதிகாரம் உங்களுக்குக் கட்டுப்பட்டது. இந்தப் பேரவைக்குத்தான் அதிகாரமே தவிர, அப்பாவுக்கோ, தனிமனிதனுக்கோ இல்லை என்பதை அறிவேன்.

நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவைக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றவா்களைத் தண்டித்த நிகழ்வுகளை எல்லாம் பாா்த்திருக்கிறேன். எனக்கு ஓா் ஆசை. நான் பதவியில் இருந்து 5 ஆண்டு காலமும் யாரையும் தண்டிக்காமல் இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பை எனக்கு அனைவரும் தர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT