தமிழ்நாடு

கடலூர் சிப்காட்டில் தனியார் ரசாயன தொழிற்சாலையில் தீ: 3 பேர் பலி

13th May 2021 10:25 AM

ADVERTISEMENT


கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 

கடலூர் சிப்காட்டில் உள்ள கிரிம்சன் என்ற தனியார் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் இருந்து பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆலை முழுவதும் கரும்புகையுடன் காட்சியளிப்பதால் தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.

ADVERTISEMENT

Tags : fire broke private chemical factory
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT