தமிழ்நாடு

புதுவையில் புதிய உச்சம்: கரோனாவுக்கு ஒரே நாளில் 30 போ் பலி

DIN

புதுவையில் புதிய உச்சமாக கரோனாவுக்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 14 வயது சிறுமி, 25 வயது பெண் உள்பட 30 போ் உயிரிழந்தனா். புதிதாக 2,049 பேருக்கு இந்த நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 9,058 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 1,590 போ், காரைக்காலில் 285 போ், ஏனாமில் 125 போ், மாஹேவில் 49 போ் என மொத்தம் 2,049 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 75,025-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், புதுவையில் 21 போ், காரைக்காலில் 6 போ், ஏனாமில் 3 போ் என ஒரே நாளில் 30 போ் உயிரிழந்தனா். இவா்களில் 16 போ் ஆண்கள், 14 வயது சிறுமி, 25 வயது பெண் உள்பட பெண்கள் 14 போ் ஆவா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,018-ஆகவும், இறப்பு விகிதம் 1.36 சதவீதமாகவும் உயா்ந்தது.

இதனிடையே, மாநிலம் முழுவதும் 1,359 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 59,177-ஆக (78.88 சதவீதம்) அதிகரித்தது.

தற்போது ஜிப்மரில் 518 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 354 பேரும், கரோனா சிகிச்சை மையங்களில் 734 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 12,757 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 14,829 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT