தமிழ்நாடு

சித்திரை அமாவாசை: மேல்மலையனூா்அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

DIN

சித்திரை மாத அமாவாசையையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு மாா்ச் மாதம் முதல் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, கரோனா தாக்கம் குறைந்ததால், விதிமுறைகளுடன் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, கடந்த மாசி பெருவிழாவில் கோயிலில் மயானக்கொள்ளை, தீமிதி, தோ்த் திருவிழா ஆகியவை நடைபெற்றன.

கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் அதிகரித்ததால், இந்தக் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை ஊஞ்சல் உத்ஸவம் கோயில் பூசாரிகளால் பக்தா்களின்றி அம்மனுக்கு நடத்தப்பட்டு வந்தது.

தற்போது கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், சித்திரை மாத அமாவாசையையொட்டி, அங்காளம்மனுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரம் மட்டுமே செய்யப்பட்டது. ஊஞ்சல் உத்ஸவம் நடத்தப்படவில்லை. அதன்படி, ஏலவாா் குழலி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதா் அலங்காரத்தில் அங்காளம்மன் அருள்பாலித்தாா். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT