தமிழ்நாடு

ஊரடங்கு: ஆட்டோவில் சென்று ஆரணி காவல்துறையினர் ஆய்வு

DIN

கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மே 10 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் காலை 6 மணி முதல் 12 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் இயங்கும். மருந்துக் கடைகளும் செயல்படும். மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்று தெரிவித்தது. பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் ஆரணி காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்பேரில் பொதுமக்கள் கூட்டமாக விடுவதைத் தவிர்க்கும் வகையில் ஆரணி போலீசார் ஷேர் ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கியில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். 

ஆரணி மல்லி குப்பம் சின்னம்பேடு போந்தவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஷேர் ஆட்டோவை போலீசாரே ஓட்டிச் சென்று மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினர். மேலும் அத்தியாவசியத் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT