தமிழ்நாடு

'தங்கள் தலைமையில் செயல்படும் காலம் பொற்காலம்' - பேரவைத் தலைவருக்கு முதல்வர் வாழ்த்து

12th May 2021 01:40 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் அவைத் தலைவராக அப்பாவு மற்றும் துணைத் தலைவராக கு.பிச்சாண்டியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

இதன்பின்னர் பேரவையில் அவைத் தலைவர், துணைத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 

தமிழக சட்டப்பேரவையில் போட்டியின்றி அவைத் தலைவராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டு தாங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.

ADVERTISEMENT

பேரவைத் தலைவர் நாட்டின் விடுதலை மற்றும் சுதந்திரத்தின் சின்னம் என்று நேரு கூறியிருக்கிறார். அவையின் கண்ணியம், சுதந்திரத்தன்மையாக நீங்கள் வீற்றிருக்கீர்கள். 

இதற்கு முன்னர் இருந்த அவைத்தலைவர் பலரும் அவைக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளனர். தென் மாவட்டடங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் பேரவைத் தலைவராக இருந்துள்ளனர். குறிப்பாக செல்லப்பாண்டி, சி.ப.ஆதித்தனார், பி.ஹெச். பாண்டியன், முனைவர் தமிழ்க்குடிமகன், முத்தையா, பழனிவேல் ராஜன், காளிமுத்து, ரா. ஆவுடையப்பன் பல பெருமைகளை பெற்றுள்ளனர். 

இந்த பேரவையை சிறப்பாக நடத்தும் திறன் படைத்தவர் நீங்கள். தங்கள் தலைமையிலான இந்த அவையில் நாங்கள் செயல்படுவதை பொற்காலமாக கருதுகிறோம். 

பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய உங்கள் பணி இன்று அவைத் தலைவர் பதவியை அடைந்துள்ளது. மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்த நீங்கள் இப்பொது 234 சட்டப்பேரவை உறுப்பினர்களை வழிநடத்தப்போகிறீர்கள். 

உங்களுடைய உத்தரவுகளுக்கு, கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவோம். ஜனநாயகமும், மரபும் கண்டிப்பாக இருக்கும். எங்களுக்கு ஆணவம், கர்வம் இல்லை. 

தோல்வியில் துவழுவதும், வெற்றியில் இறுமாப்பு கொள்வதும் எங்களுக்கு பழக்கமில்லை, மக்கள் கொடுத்த இந்த வெற்றி எங்களை மேலும் அடக்கமுள்ளவர்களாக ஆக்கியிருக்கிறது. 

அவையின் மாண்பு கெடாமல், விரோத உணர்ச்சிக்கு இடம்தராமல், ஜனநாயக மரபுடன் நாங்கள் செயல்படுவோம் என்று உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்தார். 

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான திமுகவுக்கு துணை கொறடாவாக இருந்து அனைத்து பேரவை விவாதங்களிலும் பங்கேற்றவர். பேரவை அலுவல் நிறைவு பெறும் வரையில் இருந்து பேரவை நடவடிக்கைகளை கவனிப்பார். அவருக்கும் என் வாழ்த்துகள் என்றார். 

இதன்பின்னர் அவைத் தலைவர் அப்பாவு ஏற்புரை வழங்கினார். 

Tags : அப்பாவு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT