தமிழ்நாடு

பேரிடர் காலத்தில் துணைநிற்கும் செவிலியர்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

12th May 2021 11:05 AM

ADVERTISEMENT

இன்று(மே 12) உலக செவிலியர் தினத்தையொட்டி, பேரிடர் காலத்தில் துணை நிற்கும் செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மக்களின் உயிர் காக்கும் மகத்தான சேவையில் தாயுள்ளத்துடன் ஈடுபடுபவர்கள் செவிலியர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எனும் செவிலியர் போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்குச் சிகிச்சை அளித்து தாய்மனதிற்குரிய பரிவுகாட்டியவர். அவரைச் சிறப்பித்து செவிலியர் அனைவரின் பணியையும் போற்றிடும் நாளாக இந்நன்னாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

கரோனா: உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம்; ஊக்கத்தொகைகளும் அறிவிப்பு

ADVERTISEMENT

கரோனா பேரிடர் காலமும் போர்க்களத்திற்கு இணையானதுதான். இதில் முன்கள வீரர்களாகக் கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் பேரிடர் காலப் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வுடன் துணைநிற்கும் செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என்பதைத் தெரிவித்து, தன்னுயிர் கருதாது மன்னுயிர் காக்கும் செவிலியர்களை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Tags : nurses day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT