தமிழ்நாடு

டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசி இறக்குமதி: மு.க.ஸ்டாலின்

DIN

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த போதிய அளவு தடுப்பூசி இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசு வழங்கும் கரோனா தடுப்பூசி, 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசால் ஆக்ஸிஜன் அளவு உயர்த்தப்பட்டாலும், தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

தமிழகத்தில் போதிய அளவு ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகளை அமைக்கவும், பிற மாநிலங்களில் ஆக்ஸிஜன் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக ஆக்ஸிஜன் விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி இறக்குமதி முழு விபரம்: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT