தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க முதல்வருக்கு சி.ஐ.டி.யு. வேண்டுகோள்

DIN


கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழகம் முழுவதும் உள்ள முன் களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு.) மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரமணியன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். 

அந்த மனுவில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 

முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்த முதல்வருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த அறிவிப்பை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் பணியாற்றும் அனைத்து முன் களப்பணியாளர்களுக்கும், உள்ளாட்சி சார்ந்த சிகிச்சை மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில், உயிரைப் பொருட்படுத்தாமல் நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது முதல் நோய் தொற்றாளர்களுக்கான அடிப்படை பணிகளையும் கவனித்து வருகின்றனர். மேலும், மற்றப் பகுதிகளில் நோய்த் தொற்று ஏற்பட்டு விடாமலும் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். 

இதில் பெரும் பகுதியான ஊழியர்கள் மாதந்தோறும் மிகக் குறைவான ஊதியம் பெறும் ஒப்பந்த ஊழியர்களாகத்தான் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியம் என அறிவிக்கப்பட்டு, சிறப்பு ஊதியம் வழங்கப்படவேயில்லை. இச்செயலால், தூய்மைப் பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

தற்போது, ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மைப் பணியாளர்களின் தன்னலம் கருதாத மக்கள் நலப்பணியைக் கருத்தில் கொண்டு, சிறப்பு ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஊராட்சிப் பகுதிகளிலும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கும் ஊக்கத் தொகையை வழங்கி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT