தமிழ்நாடு

சென்னையில் 4 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு: மண்டலவாரியாக விவரம்

DIN

சென்னை அம்பத்தூர், அண்ணா நகரில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கரோனா பாதிப்பு 4,04,733 ஆகவும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,713 ஆகவும்  அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை கரோனாவுக்கு 5,368 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான 4,04,733 பேரில் 3,61,652 பேர் குணமடைந்துள்ளனர். 

நேற்று(மே 11) மட்டும் 29,770 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூர், அண்ணா நகரில் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 5 மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT