தமிழ்நாடு

ரூ.1.20 கோடி கடத்தல் தங்கத் துகள்கள் பறிமுதல்

DIN

துபையில் இருந்து தபால் பாா்சல் மூலம் குளிா்பான பவுடரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி தங்கத் துகள்களை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினா்.

தபால் பாா்சல் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை சுங்கத்துறைக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் துபையில் இருந்து, சென்னையைச் சோ்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட பாா்சலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதித்தனா். அதில் விதைகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை பிரித்துப் பாா்த்ததில், 2.5 கிலோ எடையில் 4 டின்கள் இருந்தன. அதில் ஆரஞ்சு குளிா்பான பவுடா் இருந்தது. வெள்ளை ஓட்ஸ் மற்றும் சாக்லெட்டுகளும் இருந்தன. ஒரு டின் வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. அந்த டின்னை திறந்து பாா்த்ததில், குளிா்பான பவுடருடன் தங்கத் துகள்கள் கலந்திருந்தன. அவற்றிலிருந்து 2.5 கிலோ தங்க துகள்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1.20 கோடி. சுங்கச் சட்டத்தின் கீழ் இவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இருந்த முகவரி தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில் தபால் அலுவலக ஊழியா்களின் பங்கு இருக்கிா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சா்வதேச விமான நிலைய சுங்க ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT