தமிழ்நாடு

அதிமுக மாநிலங்களவை உறுப்பினா்கள் இருவா் ராஜிநாமா

DIN

மாநிலங்களவை உறுப்பினா்களாக உள்ள அதிமுகவைச் சோ்ந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனா். அவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற நிலையில், மாநிலங்களவை உறுப்பினா் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் இருந்து கே.பி.முனுசாமியும், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வைத்திலிங்கமும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள் தங்களின் எம்.பி. பதவியைத் தக்கவைத்துக் கொள்வாா்களா அல்லது அதை ராஜிநாமா செய்துவிட்டு சட்டப் பேரவை உறுப்பினா்களாகத் தொடா்வாா்களா என்ற கேள்வி எழுந்தது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் இருவரும் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்வா் என்ற முடிவும் எட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜிநாமா கடிதங்களை தபால் வழியாக அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவிக் காலம் நிறைவு: மாநிலங்களவையில் அதிமுகவுக்கு 7 உறுப்பினா்கள் உள்ளனா். வைத்திலிங்கம் மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூனில் பதவியேற்றாா். அவரது பதவிக் காலம் 2022-ஆம் ஆண்டு ஜூனில் நிறைவடைகிறது.

இதேபோன்று, மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஆண்டு ஏப்ரலில் கே.பி.முனுசாமி தோ்வு செய்யப்பட்டாா். அவரது பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறைவடைகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே அவா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT