தமிழ்நாடு

எழுவர் விடுதலை எப்போது? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். 

7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. 

முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT