தமிழ்நாடு

ஞாயிற்றுக் கிழமையும் கரோனா நிவாரண நிதி டோக்கன்: தமிழக அரசு

11th May 2021 05:22 PM

ADVERTISEMENT

கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுக் கிழமையும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி டோக்கன் வழங்கி வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு  வரும் 16-ம் தேதி வேலை நாளாக கணக்கில் கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை பணி நாள் என்பதால் விடுமுறைக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் கால நிவாரணமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 2000 நிவாரணத் தொகையை முதல் தவணையாக மே மாதத்தில் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலம் மே 15 ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT