தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா

11th May 2021 12:26 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. 

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. கரோனா உறுதியானதை அடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கரோனா களப்பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT