தமிழ்நாடு

வங்கிகளில் சமூக இடைவெளியை மறந்த வாடிக்கையாளர்கள்

11th May 2021 10:04 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வங்கிகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.

தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மே 10 முதல் 24ஆம் தேதி வரை தமிழக அரசு பொது முடக்கம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முழு ஊரடங்கு காலத்தில், சீர்காழி பகுதியில் உள்ள தனியார் மற்றும் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி ஏடிஎம்களில் பொதுமக்கள் கரோனா தொற்று அச்சமின்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக நிற்பதைக் காண முடிகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கினாலும், பொதுமக்களும் கரோனா பரவல் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர வேண்டும்.
 

Tags : bank lockdown coronavirus atm
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT