தமிழ்நாடு

எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

11th May 2021 10:33 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்காலிக அவைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலையில் பதவியேற்பு உறுதி மொழியை வாசித்தார்.

"தமிழக சட்டப்பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டமுறைப்படி நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலையும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன் என்றும் கூறி மு.க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

 

ADVERTISEMENT

ஸ்டாலினைத் தொடர்ந்து அவை முன்னவரான தமிழக அமைச்சர் துரைமுருகனும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியும் பதவியேற்றுக் கொண்டனர்கள் 

அவர்களைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக்குத் தேர்வான புதிய உறுப்பினர்களும் பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.
 

Tags : DMK stalin MLA assembly cm stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT