தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மனுத்தாக்கல்

11th May 2021 09:56 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவிக்கு அப்பாவு மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு கு. பிச்சாண்டியும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், அவைத் தலைவர் பதவிக்கு ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு மனு தாக்கல் செய்தார். இவர் அவைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

துணை அவைத் தலைவர் பதவிக்கு கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பிச்சாண்டி மனுத்தாக்கல்  செய்துள்ளார்.

இன்று காலை சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், சட்டப்பேரவை செயலாளரிடம் இருவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT

Tags : assembly dmk tn cm stalin appavu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT