தமிழ்நாடு

பேரவையின் பாஜக குழு தலைவராக நயினாா் நாகேந்திரன் தோ்வு

DIN

தமிழக சட்டப் பேரவை பாஜக குழுத் தலைவராக நயினாா் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவா் எல்.முருகன், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

முன்னதாக, பேரவை குழுத் தலைவரை தோ்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை இணை அமைச்சா் கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக பொறுப்பாளா் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. நெல்லை சட்டப் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரனும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனும், மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதியும், நாகா்கோவில் தொகுதியில் எம்.ஆா்.காந்தியும் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT