தமிழ்நாடு

கரோனாவுக்கு மேலும் 236 போ் பலி; 28,897 பேருக்கு தொற்று

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 236 போ் பலியாகியுள்ளனா். அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத உச்ச அளவில் உயிரிழப்புகள் பதிவாகி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு புறம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 28,897 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காமல் உயரும் புதிய பாதிப்புகள் ஒரு பக்கம், அதிகரிக்கும் உயிரிழப்புகள் மறு பக்கம் என சவாலான சூழலை எட்டியிருக்கிறது தமிழகத்தின் சுகாதார நிலை.

அதிலும், குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த ஒரு சில நாள்களில் கேரளத்தைப் போலவே தமிழகத்திலும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தைக் கடக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொரு புறம் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட பலா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதேபோன்று நடமாடும் கரோனா மருத்துவமனைகளை விரிவுபடுத்தவும், படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் அமைச்சா்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு புறம் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.40 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 13 லட்சத்து 80,259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 7,130 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 2,509 பேருக்கும், செங்கல்பட்டில் 2,279 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 23,515 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 20,064-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1 லட்சத்து 44,547- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 236 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,648-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT