தமிழ்நாடு

பேரவைத் தலைவராகிறார் அப்பாவு; துணைத் தலைவர் கு.பிச்சாண்டி

DIN

தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ராதாபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ அப்பாவு தேர்வாகவுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர் அப்பாவு. 2011. 2016 தேர்தல்களில் தோல்வி அடைந்தார். கடந்த 2016 தேர்தலில் மட்டும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது. 

இதன்பின்னர் 2021 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிக அனுபவம் கொண்ட மூத்த எம்எல்ஏவாக இருக்கிறார். 

முன்னதாக, பேரவைத் தலைவராக அப்பாவு முன்னிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகின. மேலும் தென்மாவட்டத்தில் இருந்து அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியும் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் பேரவைத் தலைவராக அப்பாவு தேர்வாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற கு. பிச்சாண்டிக்கு ஆளுநர் வாழ்த்து

இவர் தென் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர். குறிப்பாக பெப்சி மற்றும் கோலா நிறுவனங்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்தவர். 

இன்று தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்ட கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி, அவையின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1996-2001 காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தவர் கு.பிச்சாண்டி. நான்காவது முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT