தமிழ்நாடு

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு: பொன்முடி

DIN

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாகத் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

ஏற்கெனவே நடைபெற்ற அண்ணாப் பல்கலைக் கழகத் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்றும், மதிப்பெண்கள் முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.  

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, ''அண்ணா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை.  நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற தேர்வில் 25 சதவிகித மாணவர்களே தேர்ச்சி அடைந்தனர்.

இதனால் மீண்டும் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படவுள்ளது. 
இதனால் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

தேர்ச்சி பெற்ற மதிப்பெண் குறைவு என்று கருதும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம். மீண்டும் தேர்வு எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அந்த மதிப்பெண் தான் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். 

பொறியியல் தேர்வு குறித்து முழு விவரம்: இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT