தமிழ்நாடு

எழிலகத்தில் அவசரக் கட்டுப்பாட்டு மையம்: கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆய்வு

DIN

தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், இன்று சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் இன்று எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர், முனைவர் அதுல்ய மிஸ்ரா, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மு. பணீந்திர ரெட்டி ஆகியோரிடம் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். 

சென்னையில் மாநில அவசரக் கட்டுபாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் செயல்படுகின்றது. பேரிடர் காலங்களில், வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையர் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கிய துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு, முன் எச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது. அவசர காலங்களில் மாவட்ட நிருவாகத்திற்கு துரிதமாக எச்சரிக்கை செய்திகளை அனுப்ப ஏதுவாக, இந்த மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், அனைத்து வகையான தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. பேரிடர் குறித்த தகவல்கள், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையம், டிஎன்ஸ்மார்ட் செயலி, சமூக வலைதளம் மற்றும் மின்னனு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொது மக்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் இம்மையத்தினை தொடர்பு கொள்ள முடியும். மேலும் பெரும் பேரிடர் காலங்களில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள், கூடுதல் தலைமை செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியோருடன் இணைந்து அரசு மேற்கொள்ளும் முன் எச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்தும் ஊடகங்களின் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பார்கள்.

இந்த மையத்தில், மாவட்டங்களிலிருந்து தினமும், மழை விபரம் சேகரிக்கப்பட்டு, பொதுப் பணித்துறையினரிடமிருந்து பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு விபர அறிக்கை பெறப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, தினமும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவன்றி, இம்மையத்தில் உள்ள 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் தொடர்புடைய துறை / மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுவன்றி, ஊடகங்களில் வெளியாகும் மீட்பு / நிவாரணம் தொடர்பான செய்திகள்/ புகார்கள் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பேரிடர் காலங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த இம்மையத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், தமிழக அரசின் தலைமைச் செயலர் அலுவலகம், பொதுத் துறை அரசுச் செயலர், முதன்மைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர், காவல் துறைத் தலைவர், கூடுதல் காவல் துறை தலைவர் (செயல்பாடு), பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் மற்றும் அனைத்து ஆட்சியர்கள் உள்ளிட்டோருக்கு 91 சேட்டிலைட் ஃபோன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போது உள்ள கரோனா சூழலில் இந்த மையத்தில் இயங்கும் தகவல் தொடர்பு மையத்திற்கு, கரோனா மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், அவசர மருத்துவ உதவி, திருமணம், இறப்பு சார்ந்த நிகழ்வுகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக மாவட்டங்களுக்கிடையே பயணிக்க தேவையான ஆவணங்கள் குறித்தும் விவரங்கள் கோரி வரப்பெறும் அழைப்புகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பேரிடராக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக 2019-2020 முதல் 2021-2022 (06.05.2021) முடிய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.10,054.80 கோடி ரூபாய் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய நிதியிலிருந்து ரூ.227.48 கோடி ரூபாயும், பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.41.43 கோடி கரோனா நோய்த் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இதுவன்றி, இதர இயற்கை இடர்பாடுகளுக்காக 2020-2021 முதல் 2021-22 முடிய ரூ.1961.13 கோடி ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மாநில நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர், பேரிடர் காலங்களில் வரப்பெறும் தகவல்களை உடனுக்குடன் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் திறம்பட பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், தற்போது மாநிலத்தில் நிலவி வரும் கரோனா சூழுலில், கரோனா நோய்த் தொற்று தொடர்பான விபரங்கள் கோரி தகவல் மையத்திற்கு வரப்பெறும் அழைப்புகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு துறைகளுக்கு ஒதுகீடு செய்யப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி துரிதமாக கரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT