தமிழ்நாடு

கரோனா நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

DIN

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு முதல் கோப்பிலேயே கரோனா நிவாரண நிதி திட்டத்துக்கு கையெழுத்திட்டார். 

அதன்படி இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடக்கிவைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

ரூ. 4,000 கரோனா நிவாரண உதவித்தொகையில் முதல் தவணையாக ரூ. 2,000 வருகிற மே 15 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் 12 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று நாள்கள் டோக்கன்கள் விநியோகத்துக்குப் பிறகு, வரும் 15-ஆம் தேதி முதல் அரிசி அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். நாளொன்றுக்கு 200 பேருக்கு அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. எந்தெந்த குடும்ப அட்டைதாரா்கள் எந்தத் தேதியில் வர வேண்டும் என்பது டோக்கனில் அச்சிடப்பட்டு தெரிவிக்கப்படும். இந்த திட்டத்துக்குக்காக தமிழக அரசு ரூ. 4,000 கோடி ஒதுக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT