தமிழ்நாடு

மே.9: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

புது தில்லி:  5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளுக்கு பின்னர் 4 நாள்களாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் இரு நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.  

பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து அதிகரித்தும், சில நேரங்களில் குறைத்தும் வந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி அவற்றின் விலையை சிறிதளவு குறைத்தன. அதன்பின்னா் அவற்றின் விலையில் மாற்றம் செய்வதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவைத்தன. மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரை பெட்ரொல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், 18 நாள்களுக்கு பின்னா் கடந்த செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயா்த்தப்பட்டன.

அவற்றின் விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.91.27-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ. 81.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.97.61-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.88.82-ஆகவும் இருந்தது. கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.91.41 ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.84.57-ஆகவும் இருந்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.93.15-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.86.65-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சனிக்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனையில் விற்பனை செய்யப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT