தமிழ்நாடு

கருணாநிதி படத்திற்கு மலர் தூவி கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்!

DIN


சென்னை: சென்னை கோபாலபுர்ம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவியபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் கண் கலங்கினார். 

ஏப்ரல் 6 -ஆம் தேதி நடைபெற்ற தமிழகத்தின் 16-ஆவது சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் திமுக 133 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

இதைத் தொடா்ந்து, கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, தமிழகத்தின் முதல்வராக "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என கூறி முதல்வராகப் பதவியேற்றுக்  கொண்டார்.  அவருக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். இதைத் தொடா்ந்து, அமைச்சரவை சகாக்கள்  33 பேரும் ஒவ்வொவரும் ஒன்றன்பின் ஒன்றாக பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து அமைச்சரவை சகாக்களுடன் குழு படம் எழுத்துக்கொண்ட பின்னர் முதல்வதாக முதல்வர் ஸ்டாலின் தனது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரின் தந்தையும் மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதி உயிரோடு இல்லாதை நினைத்து உணர்ச்சிவசப்பட்ட முதல்வர் கண் கலங்கினார். கண் கலங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது சகோதரி செல்வி நம்பிக்கையூட்டினார். தொடர்ந்து தனது இல்லத்தில்  இருந்த தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

பின்னர் அங்கிருந்து சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு செல்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT