தமிழ்நாடு

அனைவரின் கவனத்தை பெற்றுள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

DIN


மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நிதி, நிர்வாகத் துறையில் பெற்றிருக்கம் அனுபவங்கள் மற்றும் அவர் பெற்றிருக்கும் கல்விகளே அவர் தமிழக அமைச்சர்களில் கவனிக்கப்பட முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

கரோனா இரண்டாவது அலை கழுத்தை நெறுக்கும் நெறுக்கடியான நிலையில் தமிழகத்தின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்கும் நிலையில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளரான பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பழனிவேல் தியாகராஜனுக்கு  நீண்ட அரசியல் பாரம்பரியமும், நிதி, நிர்வாகத்திறன், கல்வி அறிவு குறித்த வரலாறே அனைவரும் கூர்ந்து கவனிக்கப்பட முக்கிய காரணமாக உள்ளது.

ஆலமரத்தின் விழுதில் இருந்து முளைத்த விருட்சம்: நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின்  குடும்பமே அரசியல் ரீதியான மிகப்பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பம்.  நீதிக்கட்சி சார்பாக  தமிழகத்தின் முதல்வராக  இருந்த பி.டி ராஜன்தான் இவரது தாத்தா. தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர்தான் இவரது தந்தை பழனிவேல் ராஜன். தாத்தா, தந்தை என நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட ஆலமரத்தின் விழுதில் இருந்து முளைத்து விருட்சம்தான் தற்போதைய தமிழக நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன். இவர் தற்போது திமுகவில் மிக முக்கியமான தலைவராக உருவெடுத்துள்ளார். 

நிதித்துறை: மிக மோசமான நிலையில் தமிழகத்தின் பொருளாதாரம் இருந்து வரும் நிலையிலும், கரோனா கழுத்தை நெறிக்கும் இக்கட்டான சூழ்நிலையிலும் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

கவனிக்கப்பட வேண்டிய அனுபவம்:  பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் மட்டுமின்றி நிதித்துறையிலும், நிர்வாகத்திலும் இருக்கும் அனுபவமே அவர் அனைத்து தரப்பினர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ள நபராக உள்ளார்.  அவரது கல்வி, ஆங்கில புலமை, அரசியல் நுணுக்கம், கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்காக சமூக ஊடகங்களில் தீவிர பிரசார திட்டங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. "கோ பேக் மோடி" தொடங்கி "ஒன்றிணைவோம் வா" என்று சமூக ஊடகங்களில் ஹிட் அடித்த எல்லா டிரெண்ட்கள், பிரசாரங்களுக்கும் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான நபராக இருந்தவர். 

அதிகம் படித்தவர்: பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் பட்டம், ஆராய்ச்சி பிரிவில் முதுகலைப் பட்டம், பொறியியலில் மனித காரணிகள், பொறியியலில் உளவியல் துறையில் முனைவர் பட்டம்,  நிா்வாக மேலாண்மையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் பல்கலைக்கழத்தில் முனைவா் பட்டம் பெற்றார். இவரின் ஆங்கில புலமை தேசிய அளவில் திமுகவிற்கு முக்கியமான பலமாக மாறியுள்ளது என்பது தான் தனி சிறப்பு. 

நிர்வாகத் திறன்: 1990 -இல் லேமன் பிரதர்ஸ் நிறுவனம், ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ், சிங்கப்பூரில் ஸ்டாண்டா்டு சாா்ட்டா்டு வங்கியில் நிா்வாக இயக்குநராக பணிபுரிந்த பின்னணி மற்றஉம் பொருளாதாரம் உள்ளிட்ட நிதி தொடர்பான நிறுவனங்களிலும் திறம்பட பணியாற்றிய அனுபவம் பெற்றுள்ளார். 

2016 பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர், மீண்டும் 2021 பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று தற்போது தமிழக அமைச்சரவையில்  நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட ஆலமரத்தின் விழுதில் இருந்து முளைத்து விருட்சமான பழனிவேல் தியாகராஜன், தனது நிதி, நிர்வாக அனுபத்தின் படி தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டு சீர் செய்வார் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. தனது அனுபவத்தின் அடிப்படையில் தமிழக நிதித்துறை மீட்டெடுப்பார் என்று நம்பலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT