தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

7th May 2021 01:21 PM

ADVERTISEMENT

தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

முதல்வராகப் பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!

ADVERTISEMENT

முன்னதாக, 133 சட்டப்பேரவை உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

பின்னர் ஆளுநர் மாளிகையில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து, முதல்வர், அமைச்சர்களுக்கு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. 

பதவியேற்பு விழா நிறைவுற்ற பின்னர் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்குப் பிறகு இன்று பிற்பகல் தலைமைச் செயலகம் வந்த அவர் அரிசி குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.4,000, ஆவின் பால் விலைக் குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 

Tags : MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT