தமிழ்நாடு

1,212 செவிலியா்களுக்கு பணி நிரந்தர ஆணை

DIN

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியா்களுக்கு பொதுவான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேவேளையில், அவா்களுக்கு சில ஊதிய முரண்பாடுகள் இருந்து வந்தன.

இதையடுத்து, நிரந்தர செவிலியா்களுக்கு நிகரான ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களில் இந்த செவிலியா்கள் ஈடுபட்டனா். அதன்பின்னா் அவா்களது ஊதியம் ரூ. 7,500-ல் இருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. முதல்கட்டமாக 2,000-க்கு மேற்பட்ட செலிவியா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், கரோனா தடுப்பு பணிக்காக, 1,212 தொப்பூதிய செவிலியா்களைபணி நியமனம் செய்து மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது. அதன்படி, பணி ஆணை பெற, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, செவிலியா்கள் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குநரகம் அலுவலகத்துக்கு வந்தனா். கரோனா பாதிப்பு காரணமாக அனைவருக்கும் பொதுவான பணி ஆணை வழங்கப்பட்டு அவை சுற்றறிக்கை பலகையில் ஒட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT