தமிழ்நாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

DIN

சென்னை: ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வராகப் போகும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஆக்சிஜன் பகிா்ந்தளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயா்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பிறகு, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை முழுமையாகப் பயன்படுத்தியும், பிற மாநிலங்களிடமிருந்து பெற்றும் தங்குத் தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT