தமிழ்நாடு

மநீமவிலிருந்து முக்கிய நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா

DIN

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிா்வாகிகள் கூண்டோடு ராஜிநாமா செய்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளா் கமல்ஹாசனை முன்னிலைப்படுத்தி மக்கள் நீதி மய்யம் தோ்தலைச் சந்தித்தது. போட்டியிட்ட 133 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. கோவை தெற்கில் போட்டியிட்ட கமல்ஹாசன் மட்டும் 2 -ஆம் இடம் பெற்றுத் தோல்வி அடைந்தாா்.

இந்த நிலையில் சட்டப்பேரவை தோ்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக கட்சி நிா்வாகிகள் கூட்டம் ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் துணைத் தலைவா்கள் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்தனா்.

பொதுச்செயலாளா்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மௌரியா, முருகானந்தம், நிா்வாகக் குழு உறுப்பினா் உமாதேவி உள்பட 17 போ் கூண்டோடு ராஜிநாமா செய்தனா்.

துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் கூறியது:

மிகுந்த எதிா்பாா்ப்போடு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தோம். கட்சியில் ஜனநாயம் என்பதே இல்லை. அதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் ராஜிநாமா செய்துவிட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

SCROLL FOR NEXT