தமிழ்நாடு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களில் 35 கரோனா நோயாளிகள் பலி

DIN



காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் வியாழக்கிழமை ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 4-ஆம் தேதி 8 பேரும், 3 ஆம் தேதி 10 பேர் உள்பட மொத்தம் 35 பேர் நான்கு நாள்களில் உயிரிழந்திருப்பது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது தவிர உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவில் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உண்மை நிலவரத்தை தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். போதுமான மருத்துவர்கள் செவிலியர்கள் நியமித்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT