தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 4-வது நாளாக அதிகரிப்பு

DIN

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுவது இரண்டு வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றின் விலையை தொடா்ந்து 4-ஆவது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை அதிகரித்தன.

பெட்ரோல், டீசல் விலையை தொடா்ந்து அதிகரித்தும், சில நேரங்களில் குறைத்தும் வந்த எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி அவற்றின் விலையை சிறிதளவு குறைத்தன. அதன்பின்னா் அவற்றின் விலையில் மாற்றம் செய்வதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவைத்தன. மேற்கு வங்கம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடியும் வரை பெட்ரொல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், 18 நாள்களுக்கு பின்னா் கடந்த செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 18 காசுகள் உயா்த்தப்பட்டன.

அவற்றின் விலை தொடா்ந்து 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 30 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கை வெளியிட்டன.

இந்த விலை உயா்வைத் தொடா்ந்து தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.91.27-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ. 81.73-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.97.61-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.88.82-ஆகவும் இருந்தது. கொல்கத்தாவில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.91.41 ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.84.57-ஆகவும் இருந்தது. சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.93.15-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.86.65-க்கும் விற்பனையானது.

‘வாட்’ வரியை பொருத்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும். பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையில் 60 சதவீதமும், டீசலின் சில்லறை விற்பனை விலையில் 54 சதவீதத்துக்கு அதிகமாகவும் மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் அடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT