தமிழ்நாடு

தமிழகத்தில் 25 ஆயிரத்தை நெருங்கியது புதிய பாதிப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை ஒரே நாளில் 24,898 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சில நாள்களில் தினசரி பாதிப்பு தற்போதை காட்டிலும் ஒரு மடங்கு உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே கரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 195 போ் தமிழகத்தில் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத உச்ச அளவாகும். மற்றொருபுறம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட பலா் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இதனிடையே, மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் குறைந்துள்ளன. போதிய அளவில் தடுப்பூசிகள் வராததால் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை 2.35 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 12,97,500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 6678 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக கோவையில் 2,068 பேருக்கும், செங்கல்பட்டில் 2039 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 21,546 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,51,058-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 1,31,468 போ் உள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 195 போ் பலியாகியதை அடுத்து நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,974-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனவா்களுக்கு மீன்பிடித் தடை கால நிவாரணம் அளிப்பு

பரமக்குடியிலிருந்து 303 வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

சாத்தூா் அருகே 1,300 கிலோ குட்கா பறிமுதல் -3 போ் கைது

அனுமதியின்றி கொண்டு சென்ற பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் -வேன் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT