தமிழ்நாடு

பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக்கொலை

6th May 2021 10:14 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் அருகே இளைஞர் மர்ம நபர்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மகாராஜன் (27). அதே பகுதியில் ஒரு ஒலி, ஒளி அமைப்பாக நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை காலை பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். 

பலத்த காயமடைந்த மகாராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Youth murdered near court in Palayankottai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT