தமிழ்நாடு

மானாமதுரையில் தடையை மீறி நடந்த வாரச்சந்தை: அதிகாரிகள் நடவடிக்கை

6th May 2021 01:29 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம்,மானாமதுரையில் தடையை மீறி வியாழக்கிழமை நடந்த வாரச்சந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. 

மானாமதுரையில் வாரம்தோறும் வியாழக்கிழமை காய்கறி சந்தை நடைபெறும். மானாமதுரையை சுற்றியுள்ள கிராம மக்கள், செங்கல் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என பலரும் சந்தையில் காய்கறி மற்ற பொருட்கள் வாங்குவது வழக்கம். 

கிராமங்களை உள்ளடக்கிய சந்தை என்பதால் காலை 11 மணிக்கு பிறகு தான் சந்தை தொடங்கும், 6ந் தேதி முதல் மானாமதுரையில் சந்தை நடைபெறாது அரசு தரப்பில் அறிவிக்கப்பட்ட பின்னரும்100 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தடையை மீறி கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

மானாமதுரை தாசில்தார் மாணிக்கவாசகம், பேரூராட்சி அதிகாரிகள், போலீசார் வியாபாரிகளையும், பொதுமக்களையும் எச்சரித்து அனுப்பினர். கடைகள் அனைத்தையும் அப்புறப்படுத்தியதால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT