தமிழ்நாடு

அமைச்சரவையில் உதயநிதி இல்லை

6th May 2021 05:08 PM

ADVERTISEMENT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 14-வது அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி   வெற்றி பெற்றார்.

1984-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியடைந்தார். 

எனினும் உதயநிதி தாம் போட்டியிட்ட முதல் தேர்தலியேயே வெற்றி பெற்றதால், அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. தந்தையை மிஞ்சிய மகன் என்றும் பலரால் பேசப்பட்டார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்கும் என்றும் பலதரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

படிக்க: தமிழக அமைச்சரவைப் பட்டியல்

இதனிடையே இன்று (மே 6) வெளியாகியுள்ள திமுக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை.  மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள 34 துறைகளில் உதயநிதிக்குத் துறை ஒதுக்கப்படவில்லை. 

அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில்  பாலாஜிக்கு   அமைச்சரவையில்  இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT