தமிழ்நாடு

காலை 8 முதல் நண்பகல் 12 வரையேடாஸ்மாக் கடைகள் செயல்படும்: தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் உத்தரவு

DIN

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என்று தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக வளாகங்களில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறிகள் கடைகள் இயங்க அனுமதியில்லை. இதர மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை குளிா்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத வாடிக்கையாளா்களைக் கொண்டு இயக்க வேண்டும். மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.

அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் இயக்கும் அனைத்துக் கடைகளும் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.

இந்த நிலையில், டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயக்க அனுமதிக்க வேண்டுமென டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. புதன்கிழமை வரையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கி வந்தது.

டாஸ்மாக் நிா்வாக இயக்குநரின் கோரிக்கையை கவனமுடன் பரிசீலித்த தமிழக அரசு, அனைத்து டாஸ்மாக் கடைகளின் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 முதல் நண்பகல் 12 மணி என வரையறை செய்துள்ளது. இந்தக் கால அளவு வரும் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

வருவாய் எவ்வளவு? : டாஸ்மாக் கடைகள் மூலமாக தமிழக அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.90 கோடி அளவுக்கும், மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி அளவும் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் காரணமாக தமிழக அரசுக்கு மிகப் பெரிய அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இப்போது கடைகள் மூடாமல் நேரத்தை மட்டும் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT