தமிழ்நாடு

மதுரையில் 10 ஜவுளிக் கடைகளுக்கு சீல்

6th May 2021 02:57 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்ட 10 ஜவுளிக் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வாங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் மதுரை நகரில் மதுரை மாநகராட்சி, வருவாய், காவல்துறை உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் விளக்குத்தூண், பத்துத்தூண், தெற்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் 3,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன. இப்பகுதியில் அலுவலர்கள் குழுவினர் ஆய்வு செய்தபோது பத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் விதிமுறைகளை மீறி திறந்து வியாபாரம் செய்தனர்,

ADVERTISEMENT

இதனையடுத்து கடைகளில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் பேரிடர் விதிமுறைகளை மீறியதற்காக ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ். 5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழக அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT