தமிழ்நாடு

பொன். ராதாகிருஷ்ணனுக்கு கரோனா

6th May 2021 10:33 AM

ADVERTISEMENT

மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனா பரவல் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.இதையடுத்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

ADVERTISEMENT

அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு வார்டில் தனி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT