தமிழ்நாடு

எனது தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: மு.க. அழகிரி

6th May 2021 11:25 AM

ADVERTISEMENT


தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தோ்தலில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவை ஆட்சியமைக்க வருமாறு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை அழைப்பு விடுத்தாா்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் குழுவினா் வெள்ளிக்கிழமை ( மே 7) காலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவிப் பிரமாணம் எடுத்துகொள்ள உள்ளனா்.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி இன்று தனது தம்பிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், 
என் தம்பி முதலமைச்சராவதில் பெருமை. மு.க. ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்.

முதலமைச்சராக நாளை என் தம்பி மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பதில் பெருமை அடைகிறேன்.

முதலமைச்சராக பதவி ஏற்கும் என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று நாளை முதல்வராகவிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் மற்றும் கமல் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரியும் இன்று தனது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

Tags : election MK stalin TN CM assembly election mk alagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT