தமிழ்நாடு

’மகேந்திரன் துரோகி’ : கமல் அறிக்கை

6th May 2021 09:50 PM

ADVERTISEMENT

மக்கள்நீதி மய்யத்திலிருந்து அக்கட்சியில் துணைத் தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில் அவர் ஒரு துரோகி என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வியாழக்கிழமை தேர்தல் தோல்வி குறித்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த மகேந்திரன் அறிவித்தார். 

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியில் குறிப்பிட்ட சிலரின் ஆலோசனைப்படி கமல் செயல்பட்டு வருகிறார். இதனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை. தேர்தலுக்கு பிறகு அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என காத்திருந்த நிலையில் அந்த நம்பிக்கை தற்போது இல்லை என்பதால் கட்சியிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாக் கண்டோம். துரோகிகளைக் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

மேலும் கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை எனத் தெரிவித்துள்ளார்.

தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை எனவும் கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றமில்லை எனவும் கமல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT