தமிழ்நாடு

நடிகர் பாண்டு மறைவு: கே. பாலகிருஷ்ணன் இரங்கல்

6th May 2021 04:14 PM

ADVERTISEMENT

நடிகர் பாண்டு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியக் கலைஞருமான நடிகர் பாண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,

நடிகர் பாண்டு தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கும், ஓவியக் கலைஞர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக கலைஞர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT