தமிழ்நாடு

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

6th May 2021 09:13 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு(74) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை காலமானார். 

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாண்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 

கடந்த 1975 ஆம் ஆண்டு மாணவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகமான பாண்டு, பின்னர், சிவாஜி, கமல், ரஜினி அஜித், விஜய்  உள்பட பல பிரபல நடிகர்களுடன் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். 

கேப்பிடல் லெட்டர்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த நடிகர் பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 

ADVERTISEMENT

பல திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து கொடுத்து வந்தவர் பாண்டு.  

பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கரோனா தொற்று பாதிப்பால் நடிகர் பாண்டு காலமானதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை.

மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு அவரது மூன்றாவது மகன் பிரபு 9841008755

Tags : passed away Famous comedian Pandu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT