தமிழ்நாடு

தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ஸ்டாலின்

6th May 2021 09:50 PM

ADVERTISEMENT

நோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 24,898 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் மற்றும் பிற அலுவலர்களுடன் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தின் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஆக்சிஜன் பகிர்ந்தளிப்புத் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழகத்தில் உற்பத்திச் செய்யப்படும் ஆக்சிஜனை முழுமையாகப் பயன்படுத்தியும், பிற மாநிலங்களிடமிருயது பெற்றும் தங்குத் தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
 

Tags : DMK MKStalin
ADVERTISEMENT
ADVERTISEMENT