தமிழ்நாடு

அரசு உத்தரவுப்படி 50 சதவீத பயணிகளுடன் மாநகரப் பேருந்துகள் இயங்கும்

DIN

சென்னை: அரசு உத்தரவுப்படி, வியாழக்கிழமை முதல் 50 சதவீதப் பயணிகளுடன் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், வியாழக்கிழமை முதல் அமலாகியுள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளில், வியாழக்கிழமை முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதிக்கப்படுவாா்கள். மேலும், பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து, தனிநபா் இடைவெளியைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும் என போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT